காணி விடுவிப்பு திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 12 ஏக்கர் காணிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை ராணுவத்தின்; கிழக்கு மாகாண தளபதி மேஜர் ஜெனரல் அருணஜெயசேகர கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகமவிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைத்தார்.

இந்நிகழ்வு திருகோணமலை கீழ்கரை வீதியில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை 2018.12.11 மதியம் இடம் பெற்றது.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 5 ஏக்கர், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 5 ஏக்கர், சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஏக்கர் காணிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 22வது படை பிரிவு கட்டளைத்தளதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்த்தன, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துள்ளா மகரூப், மற்றும் ;கடற்படை, பொலிஸ் உயர் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் ; கலந்து கொண்டனர்.