கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு புதுநகர் பால்சபை வீதியினை புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகள் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசனின் பணிப்புரையின் கீழ் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மட்டக்களப்பு புதுநகர் பால்சபை வீதியினை கொங்கிரீட் போடப்பட்டு வீதி புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன
வீதிக்கான கொங்கிரீட் இடும் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் , மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் ,,மாநகர சபை உறுப்பினர்களான டி .மதன் , சிவானந்தராஜா பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . பவேந்திரன் ரஜனி ,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் டி .பிரேம் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் பி .பிரசாந்தன் , பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்