எங்களது உறவுகள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்

“எங்களது உறவுகள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்” என்ற தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தின கவண ஈர்ப்புப் போராட்டம் அம்பாறை திருக்கோவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பேரணியானது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்கள் சங்கத்தின் காரியலயத்திலிருந்து அதன் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு மணிக்கூட்டுக் கோபுரத்தை சென்றடைந்தது எதிர்ப்பும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டோர்கள் சங்கத்தின் தலைவிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அரசியல் கைதிகளை துரிதகதியில் விடுதலை செய்
பயங்கரவாத தடைச்சட்டம் தேவையா மக்களை பாதுகாப்பது அரசின் கடமை சர்வதேச நீதிப்பொறிமுறையே அவசியம் என பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இன்றைய இக்கவணயீர்ப்பு போராட்டமானது பலத்த கொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்படிருந்தமை விசேட அம்சமாகும்.