பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுகிர்தராஜன் ஓய்வு!

ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிய ஒரு சிறந்த ஆசிரியரான பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திரு ஆர். சுகிர்தராஜன் 32வருடகால கல்விச்சேவையிலிருந்து 60வது வயதில் நாளை(9) ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறுகிறார்.
 
பொத்துவிலைச் சேர்ந்த அவர் 32வருடகால கல்விச்சேவையிலிருந்து நாளை (9.12.2018)  ஓய்வு பெறுகிறார்.
 
இவர் தனது மொத்த 32வருட அரச கல்விச்சேவையில் 19வருடங்கள் கல்விநிருவாகசேவையிலும் 13வருடங்கள் ஆசிரியசேவையிலும் அளப்பரிய பணியாற்றியுள்ளார். 
 
1978இல் யாழ்.பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி 1980இல் சிறப்புபட்டத்திற்காக பேராதனை பல்கலைக்கழகத்தில்  இணைந்தார். மெய்யியல்; பாடத்தில் விசேடசிறப்புப்பட்டம்; பெற்றார். 1985களில் பேராதனைபல்கலைக்கழகத்தில் மெய்யியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
 
 
1986 இல் பட்டதாரி ஆசிரியராக பற்றிமாக்கல்லூரியில் முதல் நியமனம்பெற்ற திரு சுகிர்தராஜன்; இலங்கை அதிபர்சேவைப்பரீட்சையில் சித்திபெற்று 1991இல் அதேகல்லூரியில் உபஅதிபரானார்.
 
1994இல் பட்டப்பின் கல்வி டிப்ளோமா சித்தி (Pபுனுநு)யுடன் 1997இல் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா சித்தி (னுளுஆ) யும்பெற்றார்.
 
திரு சுகிர்தராஜன்; 04.01.1999ல் இலங்கை கல்வி நிருவாகசேவை பரீட்சையில் சித்திபெற்று அதேகல்லூரியில் பிரதிஅதிபரானார்.
 
அவரது திறமையையுணர்ந்து அவரை கல்முனை வலயம் 2000இல் உதவிக்கல்விப்பணிப்பாளராக அழைத்தது.அங்கிருந்து அதே ஆண்டில்  சம்மாந்துறைவலயத்திற்கு இடமாற்றம் பெற்று அங்கு பிரதிக்கல்விப்பணிப்பாளரானார்.
 
அங்கு அவர் முதல் 5 வருடங்கள் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் பின்னர் 2010வரை முதல் நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றிவந்தார். அதற்குள் 2001இல்  அதிபர்சேவையில் 1ஆம் தரத்திற்குள் தெரிவானார்.
 
சம்மாந்துறையில் அவர் முதல் 5வருடங்கள் முகாமைத்துவத்திற்குப்பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் இறுதி 6வருடங்கள் நிருவாகத்திற்குரிய பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் மொத்தம் 11வருடங்கள் எம்முடன் சீரியசேவையாற்றியிருந்தார்.
அவரது மொத்த அரசசேவையில் 1ஃ3 பங்கு சம்மாந்துறையில் அமைந்திருந்ததை இவ்வண் சுட்டிக்காட்டலாம்.
சதா சுறுசுறுப்பாக இயங்கும் அவர் எதையும் கச்சிதமாக நேர்த்தியாக நேரத்துள் செய்துமுடிக்கும் திறமை கொண்டவர்.நினைத்ததைச் சாதிக்கும் திறன்கொண்டவர்.
 
2011இல் கல்முனைவலய பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் அதேஆண்டில் திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் இடமாற்றம் பெற்று 2012முதல் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளரானார்.
 
அங்கு 5ஆண்டுகள் கடமையாற்றி 2017இல் பட்டிருப்பு வலயத்திற்கு இடமாற்றம் பெற்று வலயத்தைப்பொறுப்பேற்றார். இன்றுவரை பட்டிருப்பில் கடமையாற்றி நாளை ஓய்வுபெறுகிறார்.
 
இவருடையசிறப்பு என்னவெனில் இலங்கை ஆசிரியர் சேவையிலும் இலங்கை கல்விநிருவாகசேவையிலும் முதலாந் தரத்தில் இருப்பது. வெளிவாரி பட்டப்படிப்பு நிறுவகத்தில் மெய்யியலைக் கற்பித்து பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.
 
இவர் ஓய்வுபெறும் இவ்வேளையில் அவராற்றிய அர்ப்பணிப்பான சேவைக்காக கல்விச்சமுகம் பாராட்டுகிறது.