இரு பொலிஸாரின் கொலையைக் கண்டித்து சுவரொட்டிகள்

மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸார்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்து  மன்னார் மாவட்டத்தின்  பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

 

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இனம் தெரியாத நபர்களினால் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினையடுத்து இச் செயலினை கண்டித்தும் மேலும் இது போன்ற சம்பவங்கள் நாட்டில் இடம்பெறாத வகையில் மன்னார் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் சில பொது இடங்களில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

”தேசியப் பாதுகாப்பை காப்போம்.சுதந்திரமான நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டமைக்காக கண்டிக்கிறோம். என மாணவர் தலைவர்கள்.அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.