மட்டக்களப்பு மாவட்டத்தில்,கடந்த 24 மணித்தியாலயங்களில் 57 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு நகர் பகுதியில் 57 மில்லிமீற்றரும், தும்பங்கேணியில், 44மில்லி மீற்றரும் மயிலம்பாவெளியில் 64.2மில்லி மீற்றர் மழையும், பாசிக்குடாவில் 26.0மில்லி மீற்றர் மழையும், உன்னிச்சையில் 27.0மில்லி மீற்றரும், வாகனேரியில் 17.5 மில்லி மீற்றர் மழையும், உறுகாமத்தில் 38.9 கட்டுமுறிவில் 27.0மில்லி மீற்றர் மழையும், கிராணில் 40.8 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.