காரைதீவு பிரதேசசபையின் பொதுநூலகம் வாசிப்பு மாதத்தையொட்டி மாணவரிடையே நடாத்திய போட்டிகளுக்கான பரிசளிப்புவிழா நேற்று காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதமஅதிதியாகக்கலந்து கொண்டுரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இப்பரிசளிப்புவிழா பிரதேசசபைச் செயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில் நடைபெற்றது.
அவர் அங்கு மேலும் பேசுகையில்:
வாசிப்பு தனிமனிதனை மட்டுமல்ல அந்த சமுகத்தையே வளமாக்குகின்றது. இன்றைய நவீன இலத்திரனியல் சாதனங்களும் கல்விமுறையும் வாசிப்பை தூரமாக்கிவருகின்றன. அதனால் சமுகச்சீரழிவுகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்குவதும் கல்வியை முன்னெடுத்துச் செல்வதும் வாசிப்பதனால்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதனால்தான் நமது அறிவு பெருகிக்கொண்டு செல்கின்றது. இதனூடாக தொழில் விருத்திகளைப் பெற்றுக் கொள்கின்றோம்.
தோண்டத் தோண்ட நீர் வருவதுபோல் வாசிப்பதனால் சமூகப் பண்புகள் மேம்படுகின்றன. எனவே அழியாச் செல்வமாகிய கல்வியை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வாசிப்பதன் மூலம் எமது சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டும். எமது முன்னோர்கள் இதன் அத்திவாரமாகத்தான் இந்த நூலகத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
தவிசாளராகிய எனக்கு இப்பிரதோசத்திற்குட்பட்ட நூலகங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.வாசிப்பின் மூலம்தான் உலகெங்கும் எமது தமிழினம் வியாபித்திருக்கின்றது. பல மொழிகளைக் கற்று பல பதவிகளுடன் எமது தமிழ் மக்கள் உலகமெங்கும் வாழ்ந்து வருகின்றார்கள்.எனவே எமது மாணவர்கள் எமது கல்விமான்களைப்போல் முன்னேற வேண்டும் அதற்காக வேண்டி தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருங்கள் .
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.