விவசாயிகளுக்கு உரமானியம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓமடியாமடு, ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரசேத விவசாயிகளுக்கான உரமானிய விநியோகம் மகாவலி அதிகார சபையின் றிதிதென்னயில் உள்ள உரக்களஞ்சியத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரால் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு, ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரசேதங்களுக்கான உரமானியம் போக்குரவத்துப்பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அப்பிரதேசங்களிலேயே வழங்கப்படுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட தேசிய உரசச் செயலக உதவிப்பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதற்கமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நீண்ட காலமாக இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மகாவலி அதிகார சபையினால் வழங்கப்படும் உர மானியங்களை பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை அலுவலகத்திற்குச் சென்றே பெற்றுக் கொண்டு வந்தனர்.

இதனால் இப்பிரதேச விவசாய மக்கள் நீண்ட போக்குவரத்தினையும், சிரமங்களையும் அனுபவித்தனர். அதே நேரத்தில் அதிக பண விரயங்களையும் அனுபவித்தனர். இந்த நிலையில் இப்பிரதேச விவசாயிகளுடைய சிரமங்களைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கான மானிய உரத்தினை அவர்களுடைய பிரதேசத்திலேயே பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுனின் மேற்கொண்டிருந்தார்.

மகாவலி அதிகார சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசம் என்ற வகையில் உர மானியங்கள் தங்களது பிரதேசத்திலேயே வழங்கப்படுவதனது விவசாயிகளான தங்களுக்கு மிகுந்த நன்மை பயப்பதாகவும் அதற்கான மாவட்ட அரசாங்க அதிபருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக விவசாய அமைப்புக்கள் தெரிவித்தனர்.

உரமானியம் வழங்கல் தொடர்பில் நடைபெற்ற நிகழ்வில், தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன், மகாவலி அதிகார சபையின் உத்தியேகாத்தர்களும், ஓமடியாமடு, ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரசேத விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.