மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்குவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ள நிலையில் அந்த தீர்ப்பை ஏற்கப்போவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி இது தொடர்பில் அடுத்த 24 மணிநேரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.