கொச்சிக்காய்த்தூளா ?தெரியாமல் தான் வீசினேன்

பாராளுமன்றத்தில் கொச்சிக்காய்த் தூள் தாக்குதல் என்று அறியாத நிலையிலேயே நான் மேற்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்குள் எந்தவித பொருட்களையும் அன்றைய தினம் எடுத்துச் செல்ல முடியாதவாறு சோதனை இடம்பெற்றது. இதனால், எந்தவொரு பொருளும் என்னிடம் இருக்கவில்லை.

அந்த பதற்ற நிலைமையின் போது பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எம்மை நோக்கி ஒரு போத்தல் வீசப்பட்டது. அதனையே நானும் திருப்பி எறிந்தேன். அதில், என்ன இருந்தது என்பதை நான் அறிந்திருக்க வில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கிருந்த பொலிஸார் மீதும் கதிரையால் தாக்குதல் நடாத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைததளங்களில் பகிரப்படுகின்றன. இது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என அவரிடம் வினவப்பட்டபோது,

சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்க வந்தவர்கள் பொலிஸாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. பாதால உலக குழுவுக்கு ஆடை அணிவித்து அழைத்து வரப்பட்டதுபோன்று இருந்தது. இந்தும் நான் அடிக்கவில்லை. தள்ளிவிடும் நடவடிக்கையையே முன்னெடுத்தேன் எனவும் பிரசன்ன ரணவீர எம்.பி. கூறினார்.

இன்று காலை சகோதார தனியார் வானொலி நிகழ்ச்சியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்(DC)