சித்தாண்டி கிழக்கு பகுதியில் வெள்ளப்பெருக்கு நேரில் சென்று பார்வையிட்டார் ஞா.ஸ்ரீநேசன் எம். பி

[மயூ ஆ.மலை] கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சித்தாண்டி கிழக்குப் பகுதியில் பாரியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

சித்தாண்டி வட்டார உறுப்பினர் மு. முரளிதரனின் வேண்டுகோளிற்கினங்க மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும் , வீடுகளையும் பார்வையிட்டு பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு உரிய உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதனால் ஈரளக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பெருமாவெளி, பெரியவட்டவான், இலுக்குப்பொத்தானை போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றுமுளுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது செங்கலடி பிரதேச செயலகத்தினால் போக்குவரத்திற்காக படகுச்சேவை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள்
கவலை தெரிவிக்கின்றனர்.