கட்டைபறிச்சான் சின்னப்பாலத்தினால் அதிக நீர்

பொன்ஆனந்தம்

கடந்த ஒருவாரத்திற்கு மேலாக பெய்த கடும் மழைகாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கங்கை கழிமுகம் பகுதிகளில் மழைவெள்ளம் அதிகரித்தவண்ணமுள்ளது.

கடந்த 10 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வந்தது. கடந்த இருநாட்களாக அடைமழையாக தொடர்ந்து பெய்தது. இதனால் திருகோணமலையில் கடலுடன் கலக்கும் மகாவலி கங்கை கழிமுகம் பகுதிகளில் அதிகமான மழைவெள்ளம் கடலுடன் சங்கமித்த வண்ணமுள்ளது. இதனால் கங்கையோரங்களிலும் வெள்ளம் பரவியவண்ண இருந்தன.

கங்கை நீர் கடலுடன் சங்கமமாகும் கட்டடைபறிச்சான் ஆற்றின் நீர் பாலத்தையும் மேவி பாய்வதனால் அப்பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்து இன்று சிரமங்களுக்குள்ளான நிலமைகாணப்பட்டன. கட்டைபறிச்சானுக்கும் பாலத்திற்கு மேல் உள்ள அம்மன்நகர், கணேசபுரம் பொன்ற பல பிரதேசங்களின் போக்குவரத்து மிகவும் சிரமமமாக வுள்ளதாக பொதுமக்கள் நேற்றுத்தெரிவித்தனர்.மகாவலிக்கிழைகள் திருகோணமலைக்கடலில் சங்கமிப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டைபறிச்சான் சின்னப்பாலத்தினால் அதிக நீர் பாய்வதனையும் மக்கள் சிரமத்தின் மத்தியில் பயணித்தனர்