இன்றைய களநிலவரம்.பாராளுமன்றம் கூட்டப்படும் வரை பேரம் பேசும் படலம் தொடரும். . . . .

கள நிலவரம். ……..
 
ஐக்கிய தேசிய முன்னணி -107-5=102
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -95+01+05=101
தமிழ் தேசிய கூட்டமைப்பு -16
மக்கள் விடுதலை முன்னணி -06
பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இரண்டு அணிகளுக்குமே உள்ளது, தற்போதைய நிலவரப்படி சம நிலை தன்மையை காணப்படுகிறது,
மக்கள் விடுதலை முன்னணி எந்த அணியிலும் சேராமல் சுயாதீனமாக செயற்பட முடிவு செய்துள்ளது,
இதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வகிபாகம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது, இவர்களின் ஆதரவு இரண்டு அணிக்குமே தேவையானது எனினும் இவர்கள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
ஐக்கிய தேசிய முன்னணியில்.. .
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC)-07
தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA )-06
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC)-05
ஜாதிக ஹெல உறுமய (JHU)-02
இந்த நான்கு கூட்டணி பங்காளிகளில் அல்லது ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர்களில் யாரேனும் 12 பேரின் ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு தேவைப்படுகிறது,
ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியை தொடர வேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவை படுகிறது அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து 11 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் சேர வேண்டும்.
பாராளுமன்றம் கூட்டப்படும் வரை பேரம் பேசும் படலம் தொடரும். . . . .

Chandru Kumar  (JM)