புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை வளாகத்தினுள் இருந்து காணாமல் போன ஆடுகள் மீட்பு களவா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் தண்ணீர் தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ள பண்ணையில் தங்களது காணாமல் போன ஆடுகள் பல அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் சிலர் தண்ணீர் தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்நுழைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுவரும் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் உள்ள ஆடுகள் மற்றும் மாடுகள் பல காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் தண்ணீர் தொழிட்சாலை வளாகத்திற்குள் உள்ள பண்ணையில் இருந்த ஆட்டு பட்டியில் இருந்து காணாமல் போன ஒரு தொகை ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுவரும் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆடுகள் மற்றும் மாடுகள் காணாமல் போயுள்ள நிலையில் குறித்த ஆடுகள் மற்றும் மாடுகளை தேடியலைந்த கிராமவாசிகள் அவை கிடைக்காத நிலையில் கரடியணாறு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

தண்ணீர் தொழிட்சாலை அமைக்கப்பட்டுவரும் வளாகத்திற்குள் ஆடு மாடுகள் வளர்க்கும் பண்ணை ஒன்று உள்ளது. குறித்த பண்ணைக்குள் அப்பகுதி மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அது ஒரு இரகசிய பிரதேசமாக இருந்து வந்த நிலையில் இன்றைய தினம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிரதீபன் என்பவரின் காணாமல் போன சுமார் 45 ஆடுகளில் 38 ஆடுகள் குறித்த பண்ணையில் இருந்த மீட்கப்பட்டுள்ளது.

இன் நிலையில் குறித்த பண்ணையானது அப்பகு தமிழ் மக்கள் வாழ்வாதாரத்திற்காக வளர்த்து வரும் ஆடு மாடுகளை கடத்தி காத்தான்குடிக்கு இறைச்சிக்கு கொண்டு செல்லும் இடமாக செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பண்ணை அமைக்கப்பட்டதன் பின்னரே அப்பகுதியில் இவ்வாறு ஆடு மாடுகள் களவு போவது அதிகரித்துள்ளதாக அப் பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த கரடியணாறு பொலீசார் பண்ணையில் இருந்த ஆடுகளை கைப்பற்றியதுடன் குறித்த பண்ணை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதே குறித்த பண்ணைக்குள் அப்பகுதி மக்கள் சென்ற போது அங்குள்ள ஆடுகளை மேய்க்கும் வேலைக்கு சிறுவர்களையும் அமர்த்தி உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.