பண்டாரியாவெளி அறிவாலயம் , மாணவர்களை பாராட்டும் விழா

பண்டாரியாவெளி அறிவாலயம் நிறுவுனர் அலையப்போடி நல்லரெத்தினம் அவர்களின்அனுசரணையில் அவரின் அன்பு தந்தை அமரர் அலையப்போடி அவர்களின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பு மேற்கு வலயபாடசாலைகளில் கடந்த 2017,ம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாம் தரம்புலமை பரீட்சையில் தோற்றி நேற்று 05/10/2018 வெளிவந்தபெறுபேறுகள் அடிப்படையில் வெட்டுப்புள்ளிகளை பெற்று சித்தி பெற்றமாணவர்களை கௌரவிக்கும் சாதனையாளர் விழா எதிர்வரும் 09/10/2018,செவ்வாய்கிழமை மு.ப 9,மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசாரமண்டபத்தில் அறிவாலயம் ஆலோசகர் சி.பரமேஷ்வரன்இடம்பெறும்.

இந்த சாதனையாளர் விழாவில் அறிவாலயம் நிறுவுனர்அலையப்போடி நல்லரெத்தினம் நேரடியாக கலந்து சிறப்பிப்பதுடன்பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஷ்வரன்,ஞா.ஶ்ரீநேசன்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,சிறப்புஅதிதிகளாக தவிசாளர் சி.புஷ்பலிங்கம் வலய கல்விப்பணிப்பாளர்அகிலா கனகசூரியம் பிரதேச செயலாளர் தெட்சனாகௌரி டினேஷ் டீஎவ. சீ வங்கி முகாமையாளர் அருணாசாந்த கௌரவ அதிதிகளாககோட்டக்கல்விப்பணிப்பாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்