. மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை புரிகின்ற ஆசிரியர்கள் சொர்க்கத்தை நோக்கித்தான் செல்வார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை புரிகின்ற ஆசிரியர்கள் சொர்க்கத்தை நோக்கித்தான் செல்வார்கள் ஏன் என்றால் அவ்வளவு அர்ப்பணிப்புடன் அவர்கள் தங்களுடைய கடமைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றார்கள் என  மட்டக்களப்பு மேற்கு செல்வி.அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் அதிபர் பொ.நேசதுரை தலைமையில் இன்றைய தினம் ஆசிரியர் தின நிகழ்வு மு.ப 09.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.இன் நிகழ்விற்க்கு பிரதம அதிதிகளாக அதிபர்,ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.அத்தோடு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம் ஆகியோரும் மண்முனை மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

வலயக்கல்விப்பணிப்பாளர் தொடர்ந்து உரையாற்றுகையில்

நான் முன்பு ஆசிரியராக இருந்து தற்போது அதிகாரியாக இங்கு வருகை தந்திருக்கின்றேன். ஆனால் நான் ஒரு ஆசிரியராக இருக்கும்போது இருந்த சந்தோசம் அதிகாரியாக வந்ததற்கு பின்பு இல்லை என்றுதான் கூறுவேன்.ஏன் என்றால் ஆசிரியராக இருக்கும்போது எங்களுடைய மனதில் ஒரு கௌரவம் என்று எண்ணத்தோன்றும் அதுதான் ஆசிரியர் தொழிலுக்கு இருக்கின்ற ஒரு விதமான ஆனந்தம். அத்தோடு இந்த கல்வி வலயத்தை முன்னேற்றுவதற்காக நான் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றேன்.என்னைப்போன்று இந்த வலயத்திலுள்ள அனைத்து அதிபர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலர் பாடுபட்டுகொண்டிருக்கின்றார்கள்.

மேலும் மண்முனை மேற்கு கல்வி வலயம் முன்னேறக்கூடாது என்பதில் சிலர் ஆர்வமாக இருக்கின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. எங்களது வலயத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்றுக்கொண்டால் நாங்கள் அதை தவறான முறைமூலம் பெற்றுக்கொண்டோம் என்றும் சிலர் மொட்டைக்கடிதம் போடுகின்றார்கள். எவர் எப்படி செய்தாலும் நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை எவற்றிற்கும் முகம்கொடுத்து முன்னேறிச் செல்லவும் தயாராக இருக்கின்றோம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனக் குறிப்பிட்டார்.