கன்னியா வெந்நீருற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் 40 வருடங்களின் பின்னர்

பொன்ஆனந்தம்

திருகோணமலை வரலாற்று புகழ்மிகு கன்னியா வெந்நீருற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் 40 வருடங்களின் பின்னர் அதிகளவிலான பக்தர்கள் ஆடியமாவசைவிரதமிருந்து புனித தீர்த்த உற்சவத்திலும் கலந்து சிறப்பித்தனர்.

மிக நீண்டகாலமாக குறித்த இடத்தில் பல்வேறு அரச கட்டுப்பாடுகள் காரணமாக இந்த உற்சவங்கள் சிறப்பிக்காத நிலமை இருந்த வந்தது. இந்நிலையில் தென்கையிலை ஆதீனமும் இராவண சேனை அமைப்பும் இணைந்து எற்பாடு செய்த ஆடியாமாவசை தீரத்த உற்சவத்தில் 40 வருடத்தின் பின்னர் அதிகளவிலான பக்தர்கள். விரரதகாரர்கள் கலந்து கொண்டு தமது பிதிர்கடனை செய்தனர் .இந்நிகழ்வில் பல ஆர்வலர்களும் இணைந்து பங்களித்தமை சிறபம்சமாகும்

நேற்றுக்காலை சுமார் 6.30 மணியளவில் கன்னியா வெந்நீரூற்று சிவனுக்கு விஷேட பூசைகள், அபிஷேகங்கள் இடம்பெற்ற பின்னர் தென்கையிலை ஆதீன அகத்தியர் அடிகளார் தலமையில் வெந்நீருற்று கிணற்றில்தீர்த்த உற்சவமும் மிகவும் சிறப்பாகவும் பக்தீபூர்வமாகவும் இடம்பெற்றன.

அதிகாலையில் கன்னியாவில் திரண்ட தொண்டர்கள் இதற்கான ஏற்பாடு களைச்செய்ததுடன், அன்னதானத்திற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். பல ஆண்டு களாக இவ்விடயத்தில் இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்வதில் பல சிரமங்கள் இருந்து வந்தது. மட்டுமன்றி ஆடியாமாவாசை உற்சவமும் நடைபெறாமல் இருந்த வந்தது.

இந்நிலையில் இம்முறை இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டமையை பக்தர்கள் பலரும் மிகவும் உணர்வு பூர்வமாக வரவேற்றதுடன் தமது மூதாதையர்களுக்கு மிக முக்கிய கடமையான பிதிர்க்கடனை செய்தனர். தொல்பொருள் திணைக்களம், மற்றும் படையினரது கண்காணிப்பின் கீழ் இவ்வாலயம் சென்றதன் பின்னர் இம்முறையேபல வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் உற்சவம் களை கட்டியது