திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் இராசையா நிஷாந்தன் என்பவருடைய உறுப்புரிமை நீக்கப்படுமா?

  • திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் இராசையா நிஷாந்தன் என்பவருடைய உறுப்புரிமையை நீக்குவதை தற்காலியமாக இடை நிறுத்துமாறு திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி என்.என்.பீ.முஹைதீன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத்தேர்தலின் போது வெற்றி பெற்றவர்களின் முதலாவது சபை அமர்வு கடந்த 2018/04/ 16ம்  திகதி உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது தவிசாளர் தெரிவு இடம்பெற்ற வேளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட நபரை தவிசாளராக நியமிக்குமாறும் அதன் பொருட்டு கோனேஸ்வர நாதன் என்பவரை தான் மும்மொழிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதையடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக
செயற்பட்டமையினால் தன்னை கட்சியிலிருந்து விலக்குவதாக தான் கேள்விப்பட்டதையடுத்து தனது உரிமையை வென்றெடுக்கும் நோக்கில் திருகோணமலை நீதிமன்றத்தில் சட்டத்தரணி முகம்மட் ரிஸ்வான் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும்  பிரதேச சபை உறுப்பினர் ஆர்.நிஷாந்தன் தெரிவித்தார்.

அவ்வழக்கு விசாரணைக்கு  செவ்வாய்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் உறுப்புரிமையை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் இக்கட்டளையை பிறப்பித்தார்.

அத்துடன் மீண்டும் 07ம் மாதம் 10ம் திகதி அவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.