சேனையூர் மத்திய கல்லூரி திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வரலாற்று தடம்பதித்த கல்லூரியாகும்

பொன்ஆனந்தம்

சேனையூர் மத்திய கல்லூரி திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வரலாற்று தடம்பதித்த கல்லூரியாகும். இதன்கல்விச்சேவையை மேலும் பயனுள்ளதாக்க பழையமாணவர்களும் இளையோரும் முன்வரவேண்டும்

என கல்லூரி முதல்வர் செல்வநாயகம் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்தார்

நேற்றய தினம் மாலை 3.00 கல்லூரியின் பழைய மாணவர்சங்கப்பொதுக்கூட்டம் அவரது தலமையில் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இங்கு குறிப்பிடத்தக்க கல்லூரியின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பழைய மாணவர்கள் பங்கு கொண்டு ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்தனர்.

நீண்ட வாதவிவாதங்களின்பின்னர் பழையமாணவர்கள் ஒருகுடையின் கீழ் நின்று கல்லூரியினது வளர்ச்சியில் பங்களிக்க உறுதி பூண்டனர். இறுதியில் மாணவர்சங்க நிருவாகமும் தெரிவு செய்யப்பட்டது.

திருகோணமலை நகரத்தில் உள்ள பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் பணியில் தற்காலிக இணைப்பாளராக பணியாற்றும் பழைய மாணவரான தியாகராஜா பிரபாகரன் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அவருடன் நகர பழைய மாணவர்கள் தொடர்பைப்பேணவும் வலியுறுத்தப்பட்டது.

இங்கு மேலும் உரையாற்றிய அதிபர் குறிப்பிடுகையில் எனது பதவிக்காலத்தில் ,கல்லூரியில் காணப்பட்ட பிரச்சனைகள்குறைபாட்டை நிவர்த்திக்க 5 ஆண்டு திட்டம் வரையப்பட்டு அதன்படி பணிகள் முனனெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யுத்தம் காரணமாக செயலிழந்த மாணவர்விடுதி திறக்கப்பட்டு மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.பின்தங்கிய பிரதேச மாணவர்கள் தற்சமயம் பல இடங்களிலிருந்தும் வந்து கல்வி கற்கின்றனர்.அவர்களுக்கான உதவிகள் தேவைப்படுகின்றன.

ஆரம்பபிரிவு மீளவும் பாடசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது ஆயிரம் பாடசாலைதிதட்டத்தில் நீக்கப்பட்டிருந்தது.க.பொ.த.உயர்தரத்தில் தொழில்நுட்பபிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

க.பொ.த சாதாரணதரத்தின் அடைவு மட்டம் கடந்த வருட பெறுபேற்றின் படி கல்லூரி வலாற்றி;ல் சிறந்த பெறுபேறு எட்டப்பட்டுள்ளன. 33 மாணவர்களில் 32 பேர் உயர்தரத்தில் கற்க தகுதிபெற்றுள்ளனர்.

இவ்வாறு பல மாற்றங்கள் வளர்ச்சிப்பாதையில் இருந்தாலும் பல வளக்குறைபாடுகள் உள்ளன. ஆசிரியர் தேவைகள், சகல மட்டங்களிலும் உள்ளன மாணவர்களின் கல்வி அடைவில் விஷேடவேலைதிட்டங்கள் செய்ய வேண்டியுள்ளன.

தற்போது குறிப்பிடத்தக்க பிரிவு மாணவர்கள் மாலைநேரம் தங்கி நின்று கல்வி பயிலும் வசதி ஏற்படுத்தப்பட்டு பல அசிரியர்களும் பிரதி அதிபர் பு.சுதாகரன் உட்பட்ட நாமும் அற்பணிப்புடன் செயலாற்றி வருகின்றோம்.

கல்லாரி 60 ஆண்டைக்கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் அதனைக்கொண்டாடவேண்டியுள்ளது. இதுவரை காலமும் கல்லூரிக்காய் அற்பணித்த ஆசிரிய ,அதிபர் பெருந்தகைகள் மதிப்பளிக்க வேண்டிய பொறுப்புள்ளது.விளையாட்டு;துறையை விருத்தி செய்ய வேண்டியுள்ளது. அதற்கான வளங்கள் வழிகாட்டல்கள் தேவையாகவுள்ளன.

இவை அனைத்தையும் செய்ய பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் தமது பங்களிப்பை நல்க வேண்டியது காலத்தின்தேவையாகும்.

இந்தக்கல்லூரி உயர்தரமாணவர்களின் நலன்கருதி பல்கலைக்கழத்திற்கு தெரிவான சாலையூரைச்சார்ந்த அச்சுதன்,ஜனார்த்தனன் போன்ற பழைய மாணவர்கள் வகுப்புக்களை நடாத்துகின்றனர். அவர்கள் தாமாக முன்வந்து திறம்பட உணர்வுடன் சேவையாற்றுகின்றனர் அவர்களைப்போன்று எமது பழைய மாணவர்கள் சிந்தித்தால் நாம் பல மாற்றங்களை காணலாம்.

பெற்றாரின் ஒத்துழைப்பு ஆரம்பத்தில் குறைவாக இருந்தது. தற்காலத்தில் அது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளமை பாராட்டப்படவேண்டிய காரியமாகும்

எனவே எதிர்காலத்தில் இந்தப்பிரதேசத்தின் கல்வி மாற்றத்திற்கான நிலையமான கல்லூரியின் கல்வி அபிவிருத்தியில் சகல பழைய மாணவர்களும் உரிமையுடன் பங்களிக்க முன்வரவேண்டும்.அதுவே எமது எதிர்கால சமூகத்திற்கு நாம் ஆற்றும் முக்கியமான கடமையாகும். எனவும் அறைகூவல் விடுத்தார்.