பஸ் கட்டணம் அதிகரிப்பு

பஸ் கட்டணத்தை 12.5 சதவீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்திருந்தார். இதன் கீழ் அரச தனியார் பஸ் போக்குவரத்துக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.ரி.பிரேமசந்ர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 12 ரூபாவாகும். 17 ரூபா வரையிலான பஸ் கட்டணம் 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

21 ரூபா முதல் 25 ரூபா வரையிலான கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 29 ரூபா முதல் 34 ரூபா வரையிலான கட்டணம் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

35 ரூபாவுக்கும் 40 ரூபாவுக்கும் இடைப்பட்ட கட்டணம் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 42 ரூபாவுக்கும் 48 ரூபாவுக்கும் இடையிலான கட்டணம் 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, 50 ரூபாவுக்கும், 60 ரூபாவுக்கும் இடையிலான கட்டணம் 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

62 ரூபாவிற்கும் 67 ரூபாவுக்கும் இடைப்பட்ட கட்டணம் 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 69 ரூபா முதல் 73 ரூபா வரையிலான கட்டணம் 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
76 ரூபாவுக்கும், 81 ரூபாவுக்கும் இடைப்பட்ட கட்டணம் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.