ஓந்தாச்சிமட கிராமிய சித்த ஆயர்வேத வைத்தியசாலையில் புதிய பிரிவுகள் ஆரம்பித்து வைப்பு.

மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம், கிராமிய சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் உள் நோயாளர் பிரிவு அண்மையில் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும், சிறப்பு சிகிச்சை பிரிவுகளாக பஞ்சகர்மம், பாரம்பரிய வைத்திய சிகிச்சைப்பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ அத்தியட்சகர் அருளப்பன் அன்ரன் அனஸ்ரின் இதனை ஆரம்பித்து வைத்தார். குறித்த வைத்திய அத்தியட்சகர், இதற்கு முன்னர், ஏறாவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் உள்நோயாளர் பிரிவு, பாரம்பரிய வைத்தியபிரிவு ,அக்குபஞ்சர் பிரிவு, மூலிகை தோட்டம் போன்றவற்றை ஆரம்பித்து வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.