கிராமசேவை உத்தியோகத்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் வெளியீடு.

(படுவான் பாலகன்) நாடு முழுவதிலும் உள்ள கிராமசேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2016ம் ஆண்டு நடைபெற்ற போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து பின் தேர்முகத்தேர்வில் தோற்றி கிராமசேவை உத்தியோகத்தர் தரம் – 3சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையதளத்தில் (http://www.moha.gov.lk/web/images/latest_document/exam_results/gnexamfinalresult.pdf)  வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு இலட்சத்து 20ஆயிரம் பேர் தோற்றியிருந்த குறித்த பரீட்சையில் 4ஆயிரம் பேரின் பெயர்கள் நேர்முகத்தேர்வுக்காக வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த பதவிக்காக 1668பேரின் பெயர்கள் குறித்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.