எரிபொருளின் விலை தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கைகளில்

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் சேர்ந்தே தீர்மானிக்க போவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும், இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய கம்பனியையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதா அல்லது மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களாக முன்னெடுப்பதா என்பதை பற்றி இதுவரை எந்தவொரு அரசும் முடிவு செய்யவில்லை என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க கலந்து கொண்டார்.