மாணிக்கராஜா தவிசாளராக வருவது கிஸ்புல்லாவுக்குப் பிடிக்கல்லையாம்?

மீண்டும் ஆரையம்பதி மக்களை ஏமாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு,
பாரிய கனவுடன் பல இன்னல்களுக்கு மத்தியில் கூட்டமைப்பை வெற்றிபெறச்செய்தோம் இறுதியில் நடந்தது என்ன
மாணிக்கராஜா தோற்கவில்லை தான் நம்பிய, தன்னை முன்னிலைப்படுத்தி களமிறக்கிய தனது கடசி உட்பட ஏனைய அனைவராலும் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டார்,

ஏனைய கட்சிகள் வென்ற த.தே. கூட்டமைப்பை தோற்கடிக்க விரும்பவில்லை என்பது உப தவிசாளர் தெரிவின் மூலம் வெளிப்படுகின்றது அத்தோடு கூட்டாக ஒரே கட்சியில் போட்டியிட வைத்த தலைமை, தவிசாளர் பதவி தவறவிடப்பட்ட பின்னர் எதற்கு உபதவிசாளர் பதவியை ஏற்கவைத்துள்ளது? இதுதானா தங்கள் கட்சியின் ஒற்றுமை? தங்களுக்கு ஆதரவு வழங்கிய ஆரையம்பதி மக்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமில்லையா இது ”

ஆரையம்பதி பிரதேச சபையின் ஆட்சி, ஐம்பதோ,அறுபது வாக்குகளை மட்டும் எடுத்து படுதோல்வியடைந்த சுயேடசை உறுப்பினருக்கு, மக்கள் ஆணையில் வென்ற, நாட்டின் எதிர்க் கட்சியான ஒரு கட்சியின் உறுப்பினர் கோயில் மாடுபோல் தலையாட்டுவதா? வெட்கமில்லையா கட்சிக்கும் கட்சி தலமைக்கும்?ஏன் உங்களைத் தெரிவு செய்த மக்களுக்கும்தான்.

ஜனா அண்ண் கூறியதுபோல் “மாணிக்கராஜா தவிசாளராக வருவது கிஸ்புல்லாவுக்குப் பிடிக்கல்லையாம்” அப்போ எத்தனை கோடி வாங்கி தங்கள் கட்சி ஆரையம்பதி மக்களின் ஆசைக்கு ஆப்புவைத்தீர்கள்? ஏன் மாணிக்கராஜா தவிசாளராக வந்தால் ஆரையம்பதியிலிருந்து ஒரு ஆணியைக்கூட மாற்றானால் புடுங்க முடியாமல் போய்விடுமே என்ற பயத்தில் தானா தங்களிடம் பேரம் பேசியதும் பெருந்தொகையைத் தள்ளியதும்? ஐ,தே,க வில் போட்டியிட்டு வென்ற இரு தமிழரும் தங்கள் கட்சிக்கு ஆதரவு வழங்கி தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற தங்களை நாடி வந்த போது ஏன் அவர்களுடன் உடன்பாட்டிற்கு வராமல் உதாசீனப்படுத்துனீர்கள்?
அதற்குமுன்னரே பேரம்பேசப்பட்டு பெருந்தொகை தள்ளப்பட்டுவிட்டதா? ரணிலுக்கு ஆதரவளித்து இருப்பை காப்பாற்ற முடிந்த தலமையால் ஏன் ரணில் கட்சியில் போட்டியிட்டு வென்ற தமிழர்களுக்கு ஆதரவளித்து எங்கள் இருப்பை காப்பாற்ற முடியாமல் போனது அதற்குமுன் பேரம் பேசப்பட்டு பெருந்தொகை தள்ளப்பட்டுவிட்டதா? இன்னும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை உப தவிசாளர் பதவியைத் துறந்து எதிர்கட்சியில் அனைவரையும் அமர்ந்து எம்மையும், எம் மண்னையும், மாற்றானுக்கு தாரைவாற்பதைத் தவிர்த்து எம்மக்களின் சிறந்த அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்யவும் அல்லது பேரம்பேசலின் மூலம் இவ் ஆட்சியைக்கவிழ்த்து தங்களின் பிரதிநிதிகளை அரியாசனமேற்றுங்கள் இல்லையேல் மீண்டும் த,தே,கூ ஆரையம்பதி மக்களுக்குமட்டுமல்லாது ஒட்டுமொத்த இப் பிரதேச மக்களுக்கும் துரோகம் செய்த மாறாப் பழியைச் சுமக்கவேண்டி ஏற்படுவதோடு மாணமுள்ள இப்பிரதேச தமுழன் ஒருவரும் மாகாண சபைத்தேர்தலில் வாக்களிக்கமாட்டான்…. பாவம் எங்களால் தெரிவு செய்யப்பட்ட உங்கள் உறுப்பினர்கள் வெள்ளேந்திகளாய் தங்களின் தலமேயின் சுயரூபம், வஞ்சகக்குணம் தெரியாமல் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாய் தலமையைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றனர்

இது ஒரு ஆரையம்பதி மகனின் முகப்புத்தகப்பதிவு.