முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் இழப்பீடுகள் வழங்கிவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த கால போரின்போது சொத்துக்களை இழங்தவர்கள் ஒருதொகுதி பேருக்கு இழப்பீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டுற்கு முன்னர்  முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற போர் நடடிக்கையின்போது மக்களுக்கு இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்தழிவுகள் தொடர்பில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பீடுகள் தொடர்பில் கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலகம் ஊடாக மாவட்ட செயலகத்திடம் மீள்குடியேற்ற அமைச்சு விபரத்திரட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது .

அதற்கமைய இன்று 06.04.18 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அரச ஊழியர்கள்,மற்றும் ஆலயங்கள்,மற்றும் பொதுமக்கள் என 338 பேருக்கு இழப்பீடு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடு வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் மற்றும் அமைச்சின் அலுவலக அதிகாரிகள், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன்,சாந்திசிறீஸ்கந்தராசா, பிரதேச செயலாளர்கள் என அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவியினை வழங்கியுள்ளளார்கள்.

இது கட்டம் கட்டமாக வழக்கப்பட்டுக்கொண்டிருக்கும் என்றும் போரில் ஏற்பட்ட இழப்பீடுகள் குறித்து விண்ணப்பிக்காதவர்கள் பிரதேச செயலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணபித்து கொள்ளலாம் என்றும் மாவட்ட செயல தகவல்கள் தெரிவிக்கின்றன