வவுணதீவு பிரதேசசபை தமிழ்தேசிய கூட்டமைப்பு வசம்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசசபையின்  தவிசாளராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செல்லத்தம்பி சண்முகராசா வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டார். பிரதித் தவிசாளராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பொ.செல்லத்துரையும் தெரிவாகினார்.

மண்முனை மேற்கு(வவுணதீவு) பிரதேசசபைக்கான முதலாவது அமர்வு உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இன்று(3) இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவில், தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் நடுநிலை வகித்ததுடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கினர்.