வெல்லாவெளி மக்களுக்கு விடுபட்ட 105 வீட்டுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது –

முன்னாள் பிரதிஅமைச்சர் சோ. கணேசமூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு இவ்வருடம் 270 வீடுகள் ஒதுக்கபட்டது. இதில் 105 வீட்டுக்கான அனுமதி அமைச்சினால் மறுக்கப்பட்டது. இதனைக் கவனத்தில் கொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி அதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்தவாரும் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் முன்னாளஒ; பிரதி அமைச்சரும் ஐக்கியதேசியகட்சியின் பட்டிருப்புதேர்தல் தொகுதியின் அமைப்பாளருமாகிய சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு இவ்வருடம் 270 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 105 வீடுகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் க.nஐகநாதன் ஆகியோர் தெரிவித்தார்கள்.

இதனைக் கவனத்தில் கொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர், அமைச்சர் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய மறுக்கப்பட்ட வீட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அத்துடன் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் காணப்படும் வீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகவும் தெரிவித்தார்.

இதற்காக மேலதிகமாக வீடுகளை இவ்வருடம் ஒதுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்ததாக முன்னாள் பிரதிஅமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.