ஊழலற்ற உள்ளுராட்சிசபையாக ஆலையடிவேம்புசபை மிளிரும்:

சகலகட்சிகளினதும் ஆதரவுடன் வரலாற்றுச்சாதனையுடன் தெரிவான எமது சபை ஊழலற்றஉள்ளுராட்சிசபையாக ஆலையடிவேம்புசபை மிளிரும்.
இவ்வாறு ஈரோஸ் ஜனநாயக முன்னணி முக்கியஸ்தரும் கிழக்குமாகாணசபையின்
முன்னாள் உறுப்பினருமான சோமசுந்தரம் புஸ்பராசா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த தேர்தலில் ஆலையடிவேம்புசபையில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி
வேட்பாளர்களடங்கிய தமிழ்த்தேசிய விடுதலை கூட்டமைப்பு 6ஆசனங்களையும்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 5ஆசனங்களையும் ஜ.தே.கட்சி 4ஆசனங்களையும்
தமிழ்மக்கள் பேரவை 1 ஆசனத்தையும் பெற்றிருந்தது.
முதல் அமர்வில் தவிசாளர் தெரிவின்போது எமது ஈரோஸ் ஜனநாயக முன்னணியினர்
12வாக்குகளையும் சு.கட்சியினர் 2 வாக்குகளையும் பெற்றனர். இரு சு.கட்சி
உறுப்பினர்கள் நடுநிலையாக இருந்தனர்.

எமக்குக்கிடைத்த 12வாக்குகளில் எம்மவரின் 6வாக்குகள் ஜ.தே.கட்சியின்
4வாக்குகள் தமிழ்மக்கள்பேரவையின் 1வாக்கு சு.கட்சி உறுப்பினரொருவரின் 1
வாக்கு என்பன கிடைக்கப்பெற்றன. அதாவது அனைத்தக்கட்சிகளினதும் வாக்குகள்
கிடைத்தன.

இதன்படி இதுவரை அம்பாறை மாவட்ட சபை அமைப்பு வாக்களிப்புகளைப்பார்க்கையில்
இவ்வாறு அதிகப்படியான 12வாக்குவித்தியாசத்தில் வெற்றீயீட்டி
ஆட்சியமைத்ததென்பது ஒரு வரலாறாகும்.

எமது ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர் கே.பேரின்பராசா தவிசாளராகவும்
ஜ.தே.கட்சியின் விக்ரர்ஜெகன் உபதவிசாளராகவும் தெரிவானார்கள்.
எது எப்படியிருப்பினும் எமது வெற்றிக்கு சபையிலுள்ள அத்தனை 4கட்சிகளும்
ஆதரவளித்துள்ளன. அதுவும் ஒரு வரலாறாகும்.

எனவே நாம் எவ்விதமான பாராபட்சமுமில்லாமல் முரண்பாடில்லாமல் சகல
உறுப்பினர்களையும் அரவணைத்து ஊழலற்ற நீதியான நேர்மையான சபையாக
முன்மாதிரியான சபையாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். என்றார்.