ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் வேட்பாளர் களம் இறங்குவார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் கீழ் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபுர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தம்மை குறிபார்த்துக் கொண்டிருக்கின்றது. எம்மில் யாரையும் அரசாங்கம் விட்டு வைக்கவில்லை. ஜி.எல். பீரிஸ் மீது மட்டும்தான் இதுவரை வழக்குத் தொடரப்படவில்லை.

தங்களது செயற்பாடுகளின் போது சட்ட ரீதியற்ற அமைப்பாக இருந்தாலும், எப்.சி.ஐ.டி. யின் அவதானிப்பு இருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் எனவும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.