கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக எம்.சீ.எம்.ஷரீப்

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளராக எம்.சீ.எம்.ஷரீப் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் வியாழக்கிழமை  (15)  நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் செயலாளராகவும் பிரதிப்பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) கடமையாற்றி வருபவர் எனவும் தெரியவருகின்றது,

கிழக்கில் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும் கூட்டுறவு துறையின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் புத்துயிர் படுத்தும் நோக்கிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் அசங்க அபேவர்தன கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அசங்க அபேகுணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.