பாண்டிருப்பு வேல்முருகு சிறுவர் பூங்கா சுற்றுமதில் விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது!

(பாண்டிருப்பு கேதீஸ்)

பாண்டிருப்பு வேல்முருகு சிறுவர் பூங்கா சுற்றுமதில் விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது!

பாண்டிருப்பு கடற்கரை வீதியில் மாகா விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள வேல்முருகு சிறுவர் பூங்காவின் சுற்று மதில் விஷமிகளால்  இரவு (6) உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சன நடமாட்டம் இல்லாத இந்த இடத்தில் இரவில் இந்த நாசகார வேலைகளை இனம்தெரியாத விஷமிகள் செய்துள்ளார்கள். மக்கள் குழப்பமடைய வேண்டாம் இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என சம்பவ இடத்திற்கு சென்ற முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.