நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலய மைதானத்தினை அலங்கரித்த வானுர்தி

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி இன்று(03) ஞாயிற்றுக்கிழமை; இடம்பெற்றது.
குறிஞ்சி, முல்லை ஆகிய இரண்டு மாணவ குழுக்களினால் இல்லங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு இல்லம் வானுர்தி அமைப்பிலும் மற்றைய இல்லம் கிளி அமைப்பிலும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வாகிய இன்றைய தினம், மாணவர்களுக்கிடையிலான குறுந்தூர ஓட்டமும், ஆசிரியர்கள், பழைய மாணவர்களுக்கிடையிலான அஞ்சல் ஓட்டமும், சிறுவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் போட்டிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்களின் அணிநடை மரியாதையும், உடற்பயிற்சி கண்காட்சியும் இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் செ.பரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.