முனைப்பினால் கொக்கட்டிச்சோலை கிராமத்தில் வாழ்வாதாரத்திட்டம்

முனைப்பினால் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் வாழ்வாதாரத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முனைப்பின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.

விசேட தேவைக்குட்பட்ட  மூன்று பிள்ளைகளின் தந்தையும்குடும்பத்தலைவருமான த.வாமதேவன்  என்பவருக்கே இவ் உதவித்திட்டத்தின் கீழ் மாவரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
விசேட தேவைக்குட்பட்ட நிலையில் யுத்தத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு  தனது அன்றாட ஜீவனோபயத்தை முன்னெடுப்பதற்கு மிகுந்த சிரமங்களை எதிர் கொள்ளும் குடும்பமொன்றின் தேவை குறித்து  முனைப்பு நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை முனைப்பு நிறுவனத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் வைத்து அதன் தலைவர் மா.சசிகுமார் அவர்களின் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முனைப்பு நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன், முனைப்பு நிறுவனத்தின் சுவிஸ் கிளையின் நிருவாக உறுப்பினர் த.கேதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.