செயலாளர்கள், அங்கத்தர்வகள் பற்றிய விபரங்களை ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும்

நடைபெற்ற தேர்தலில் 340 உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவான அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் மாதம் 6ம் திகதி தொடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

அங்கத்தவர்கள் எந்தெந்தக் கட்சிகளில் இருந்து தெரிவானோர்களோ, அந்தக் கட்சிகளின் செயலாளர்களுக்கு உள்ளுராட்சி நிறுவனங்களுக்காக நியமிக்கப்பட வேண்டிய அங்கத்தவர்களின் எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் பிரகாரம் எதிர்வரும் 2ம் திகதி செயலாளர்கள், அங்கத்தர்வகள் பற்றிய விபரங்களை ஆணைக்குழுவிற்கு அறவிக்க வேண்டும்.
குறித்த விபரங்கள் மார்ச் மாதம் 3ம் திகதி வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படுமென்று மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
மொத்தமாக 50 சதவீதத்திற்கு மேலான அங்கத்தவர்கள் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் உள்ளுராட்சி நிறுவனத்தின் தலைவரையும் உபதலைவரையும் பெயரிடலாம். அடுத்த மாதம் 4ம் 5ம் திகதிகளில் அந்நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் 5 ஆயிரத்து 75 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இவர்களில் 535 பேர் பெண்களாவர்.
ஒரு சில உள்ளுராட்சி நிறுவனங்களில் பெண்களை நியமிக்குமாறு அரசியல் கட்சிகளை நிர்ப்பந்திக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். எவ்வாறேனும் பெண் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் எண்ணம் கிடையாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.