கல்முனை கார்மேல் பற்றிமாவில் மத்தியூஸ் இல்லம் முதலிடம்!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று (21) பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மத்தீயூஸ் டொரத்தியா இம்மானுவேல் மேபிள் ஆகிய இல்லங்கள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தன.  

 
முதலாம் இடத்தை  மத்தீயூஸ் இல்லமும் இரண்டாம் இடத்தை டொரத்தியா இல்லமும் பெற்று வெற்றி பெற்றிருந்தன.
 
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்  துசித வனிகசிங்க அவர்களும் விசேட அதிதியாக பிராந்திய  பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) நுவாண் வெதசிங்க  அவர்களும் கௌரவ அதிதிகளாக  கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் அப்துல் ஜலில்  கல்முனை பிரதேச செயலாளர் கே.லவநாதன் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் கல்முனை தமிழ்  கோட்டக் கல்வி அதிகாரி ஆர் திரவியராஜா ஆகியோரும் அதிபர்கள் ஆசிரியர்கள்இமாணவர்கள் பாடசாலை பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்ததைக்காணலாம்.