சிறுவர்களை வர்த்தகத்தில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை

நிதி திரட்டுவதை இலக்காகக் கொண்டு சிறுவர்களை வர்த்தகத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள் பற்றி கண்டறிவதற்காக விசேட குழுக்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தினை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களை அவர்களின் பெற்றோரும், பாதுகாவலர்களும் தொழிலில் ஈடுபடுத்த முடியாது. சில இடங்களில் பிள்ளைகளுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக அவர்களை அழைத்துச் சென்று நிதி திரட்டும் மோசடிகளும் இடம்பெறுகின்றன.
நாடுமுழுவதும் செயற்படும் குழுக்கள் இது பற்றி விசாரணைகளை முன்னெடுக்க இருக்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 1929 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம்.