கருணா ஜெயம் சந்திப்பு கருணா – பிள்ளையான் இணைந்து செயற்பட இணக்கம்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின்(TUFF)தலைவர் கருணா அம்மானுடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்(TMVP)பிரதித்தலைவர் ஜெயத்துக்குமிடையிலான சந்திப்பு நேற்று 12-02-2018 ல் கிரானில் அமைந்துள்ள கருணா அம்மான் அவர்களின் இல்லத்தில்  இடம்பெற்றுள்ளது..இதன் போது தமிழர்களை இந்த தேசியம் பேசி ஏமாற்றும் கூட்டமைப்பினரிடம் இருந்து எமது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை காப்பதுவே தங்களின் பிரதான நோக்காக இருக்க வேண்டும் என இருதரப்பினராலும் தெரிவிக்கப்பட்டது.கூட்டமைப்புடன் தாங்கள் இணைய போவதில்லை எனவும் அவர்கள் மீண்டும் முஸ்லிங்ஙளுடனே சேர்ந்து ஆட்சியமைக்க உத்தேசித்துள்ள காரணத்தினாலும் இவ்வாறன தீர்மானங்களை தாங்கள் எடுத்துள்ளதாகவும் த.ம.வி.பு கட்சியின் பிரதிதலைர் ஜெயம் அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான காலத்தின் தேவைக்கான மாற்றத்தினை தான் அங்கிகரித்துள்ளதோடு எதிர்வரும் காலங்களில் சிறந்த அரசியல் காய்நகர்த்தல்களை வடகிழக்கு தமிழருக்காக தம்மால் மேற்கொள்ள முடியும் என த.ஐ.சு.மு கட்சியின் தலைவர் கருணா அம்மான் அவர்களால் மேலும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் கோறளைப்பற்று பிரதேச சபை,கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபை ஆகியவற்றில் இணைந்து சேவையாற்ற இரு தரப்பும் முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.