தமிழ் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவு ஒரு கணம்உலகிற்குச் சொல்லும்.

நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் நாம் எமது உரிமைகளை இழந்து தவிக்க வேண்டி ஏற்படும்

 இறுதி பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சி தலைவர்  சம்பந்தர் உரையாற்றினார்

திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம்

 திருகோணமலையில் உள்ள இலிங்க நகரில் 07-02-2018 நடந்த தேர்தலுக்கு முந்திய

இறுதி பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர் கட்சி தலைவர்  சம்பந்தர் உரையாற்றினார்.

ஐயாவுடன் முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் திரு தண்டாயுதபாணியும் மற்றும் வேட்பாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இக் கூட்டத்துக்கு திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன் தலைமை தாங்கினார்

இக் கூட்டத்தில் உரை யாற்றிய  சம்பந்தர் “நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் நாம் எமது உரிமைகளை இழந்து தவிக்க வேண்டிஏற்படும்.. இந்தத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவு ஒரு கணம்உலகிற்குச் சொல்லும்.

ஆகவே தமிழர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் திருகோணமலைத் தமிழர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக் குறியாகிவிடும் என்பதை ஒரு கணம் மனதில் கொள்வதுஅவசியமாகும்” என்றார்