முனைக்காட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகிய முன்னாள் போராளியின் பதாதை எரிப்பு

தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்காக முனைக்காடு 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சின்னதம்பி லோகிதராசாவின் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதைகள் இனந்தெரியாதோரல் எரிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த, பதாதையே இன்று(05) அதிகாலை எரிக்கப்பட்டதாக வேட்பாளர் தெரிவித்தார். முன்னாள் போராளியான வேட்பாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இனந்தெரியாதோர் தனது அலுவலகத்தின் முன்பாக இருந்த பதாதைக்கு எரியூட்டி விட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் இடம்பெற்ற போது, அலுவலகத்தின் அருகாமையில் இருக்கின்ற தனது விற்பனை நிலையத்தின் முன்பாக தான் தூங்கி கொண்டிருந்ததாகவும், பதாதை எரியும் வெளிச்சம் தோன்றியதினால், உடனடியாக விரைந்து பதாதையில் எரிந்த தீயை கட்டுப்படுத்தியதாகவும் கூறினார்.