மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தைப்பொங்கல் விழா

க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தைப்பொங்கல் விழா இன்று(26.1.2018)வெள்ளிக்கிழமை காலை 7.00மணியளவில் கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தின் முன்பகுதியில் இந்துக்கலாச்சார முறையில் கோலாகலமான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மெதடிஸ்த மத்தியகல்லூரியின் பழையமாணவனும்,ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிரதி முகாமையாளரும்,பொறியியலாளருமான வை.கோபிநாத்,பாடசாலையின் பழையமாணவ சங்கத்தின் தலைவர் எஸ்.சசிதரன்,வர்த்தகர் ரீ.கிரிதராஜ்,பிரதி அதிபர்களான இராசதுரை-பாஸ்கர்,கே.சசிகாந்,உப-அதிபர்களான எஸ்.சதீஸ்வரன்,எஸ்.லோகராசா,மற்றும் பகுதித்தலைவர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது பொங்கல் படைத்து,சூரியநமஸ்காரம் செய்யப்பட்டு;பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.இத்தைப்பொங்கல் நிகழ்வுகளின்போது அதிபர்,ஆசிரியர்களுக்கு திருநீறு,திலகமிட்டு காலாஞ்சி  ,பொங்கல் வழங்கிவைக்கப்பட்டது.இத்தைப்பொங்கலினை சிறப்பிக்குமாக இந்துசமய ஆசிரியர்களினால் மாணவர்களுக்கிடையே பஞ்சபுராணம் ஓதல்போட்டி நடைபெற்றது.