சுவிஸ் நாட்டில் ஊரும் உறவும் பொங்கல் விழா-2018

புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் 5 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும் பொங்கல் விழா-2018’ நாளை ஞாயிற்றுக்கிழமை  21 ஆம்   காலை 10 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரில்  Treffpunkt wttigkofenJupiterstresse 15 ,3015 Bern15  இல் இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இவ்விழாவின்போது சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின்போது இலங்கையின் கிழக்கு வாழ் மக்கள் சுவிஸ் நாட்டில் ஒன்று சேரும் தருணம் நிகழ்வதுடன் புதிய நட்பு உண்டாவதுடன் உறவுகள் ஒற்றுமைப்படுவதற்கும் பல்வேறான நன்மை தரும் விடயங்கள் நிகழவுள்ளதுடன் எதிர்காலத்தில் ஒற்றுமையுடனான செயற்பாடுகள் மேற்கொள்ப்படுவதற்கும் களம் அமையப் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன்போது பல்வேறான தமிழர்களின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட இருப்பதுடன் பாரம்பரியம் மிக்க கலை கலாசாரப் போட்டிகள் நடைபெற இருப்பதுடன் இந்நிகழ்வைச் சிறப்பிக்க இளையராகங்கள் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது  .
ஆத்தோடு சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வின்போது பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும்  படைக்கப்பட்டதன் பின்னர் பரிமாறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வில் சுவீஸ் வாழ் ஈழத்து உறவுகள்  அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாக அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்
.தொடர்புகளுக்கு கே. துரைநாயகம் 0792415602 எஸ்.சுபாஸ்கர்0787705126 ஏ.ராஜன் 0797541317 ஆர். விஜயகுமார் 0791754923 கே.திவாகர் 0797170445 இகரன் 0763294065 தியாகு 0789355063 வி.பேரின்பராசா 0796069063.  ஆகியோர்களுடன்தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்