வாகன ஆசனப்பட்டி வாயு பலூன் ஜீலை மாதம் முதல் கட்டாயம்

இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களில் வாகன ஆசனப்பட்டி மற்றும் வாயு கட்டமைப்பு ஜூலை மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆசனப்பட்டி மற்றும் எரிவாயு பலூன் உள்ளிட்ட பயணிகளுக்கான பாதுகாப்பு முறையுடனான யூரோ iv அல்லது அதற்கு சமமான நிலையை உறுதி செய்யப்படாத வாகனங்களுக்கான இறக்குமதி யூலை முதலாம் திகதி முதல் தடை செய்யப்படுகின்றது.

 

இந்த தினத்திற்கு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் ஆசனப்பட்டி மற்றும் வாயு கட்டமைப்பு இல்லாது கண்டுபிடிக்கப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

வாகனத்தின் முன் பகுதியில் பயணிக்கும் சாரதி உட்பட பக்கத்தில் இருப்பவருக்கும் ஆசனப்பட்டி இருத்தல் வேண்டும். வாகனம் தற்செயலாக முழுமையாக மூடப்படுமிடத்து எயார் பேக் மூலம் வாகனத்தில் உள்ள பயணிகள் தப்பித்துக் கொள்ளவதே இதன் எதிர்ப்பார்ப்பு.

 
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் இத்தகைய வசதிகள் கொண்ட வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.