ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு உள்ளுராட்சி சபையைக்கூட தனித்து கைப்பற்ற முடியாத துன்பத்தோடு விடைபெறும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை கிழக்கு மாகாணத்தில் ஒரு உள்ளுராட்சி சபையைக்கூட தனித்து கைப்பற்ற முடியாத துன்பத்தோடு விடைபெறவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏஎல்எம். அதாஉல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் நடைபெற்றதேர்தல் பிரசாரப்பொதுக்கூட்டத்தில் பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில்– முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் மரச்சின்னமும் எங்களுடையது. நாங்கள் வளர்த்தது. எங்களது கண்ணீர், இரத்தம், சுவாசம் அனைத்தும் அதில் உள்ளது. எங்களுடைய மக்களின் முந்தானை ஏந்திய பிரார்த்தனயினால் உருவெடுத்த கட்சி. இறுதிக் காலத்தில் தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் சமுதாயத்துக்கு தேவையில்லை எனக்கருதியே நுஆ (தேசிய ஐக்கிய முன்னணி) என்ற கட்சியை அவர் உருவாக்கினார்.
முஸ்லிம் என்று இனரீதியில் பிரித்து பெயர் சூட்டுவதனால் நாட்டிலே பிரிவினை, சந்தேகம், மக்கள் மத்தியில் இனத்துவேசம் ஏற்படும் என்று கருதியதனாலேயே அவர் நுஆ என்ற கட்சியை உருவாக்கியிருந்தார். அதன் காரணமாக அவரின் வழிவந்த நாங்கள் எமது கட்சிக்கு தேசிய காங்கிரஸ் என பெயர் வைத்தோம்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்த சின்னத்தில் சொந்த சின்னத்தில் வாக்கு கேட்க முடியாமல் வங்குரோத்து அரசியல் செய்கிறார்கள். பாராளுமன்றம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்றால் கூட்டுக்கு போகலாம். ஆனால் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மரச்சின்னதத்pல் போட்டியிட முடியாதா? மரச்சின்னத்தில் போட்டியிட்டால் எல்லா சாயங்களும் போய்விடும் என ரவூப் ஹக்கீம் உணர்ந்துகொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து றவூப் ஹக்கீமை மொத்தமாக விலக்கி ஐக்கிய தேசிய கட்சிக்கு எடுத்துவிடவேண்டும் என்ற ரணில் விக்ரமசிங்கவின் நீண்ட கால ஆசையை தற்போது நிறைவேற்றியுள்ளது என்றார்.
அலி ஸாஹிர் மௌலானா திராணியுள்ளவராக முடிவுசெய்திருந்தால் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கலாம். ஆனால் அவர் தற்போது றவூப் ஹக்கீமின் சதி வலையில் சிக்கிவிட்டார்.
தரசு சின்னத்தின் சொந்தக்கார தலைவர் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்டின் அண்ணன் ஆவார். செயலாளர் றவூப் ஹக்கீமின் மைத்துனர் நயிமுல்லா . ஆனால் தராசு சின்னத்தின் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு றவூப் ஹக்கீமின் உரிமையுள்ள கட்சிபோல மௌலானாவுக்கு வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளது என்றார்.