மட்டு.படுவான்கரை மாணவன் விஞ்ஞானப்பிரிவில் முதலிடம்.

(படுவான் பாலகன்) வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின், விஞ்ஞானப் பிரிவில் மகிழடித்தீவு கிராமத்தினைச் சேர்ந்த ராஜன் திபிகரன் என்ற மாணவன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.
குறித்த மாணவன், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் கல்வி பயின்று, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து மாவட்டத்தில் முதல்நிலையை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.