அரசாங்க ஊழியர்களுக்கு மேலும் ஒரு சம்பள உயர்வு

அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த மாதத்தில் மேலும் ஒரு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் பெற்றுக்கொடுத்த பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு ஐந்து கட்டங்களாக வருடத்திற்கு வருடம் அரச ஊழியர்களுக்கு உரித்தாகின்றது.
இது 2020 ஆம் ஆண்டு பூர்த்தியாகின்றது. இது தொடர்பான சகல அறிவித்தல்களும், சம்பள அதிகரிப்பு முறைமைகளும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார்.
பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவுக்கு மேலதிகமாக 20 சதவீத கொடுப்பனவு ஒன்றும் ஊழியர்களின் சம்பளத்தில் சேர்க்கப்படும்.
ஒவ்வொரு சம்பள அளவுக்கும் ஏற்ற வகையில் ஊழியர்களின் அடுத்த மாத சம்பளத்தில் உயர்வு வழங்கப்படும் என்றும் திரு.சோமதாச தெரிவித்தார்.
தற்போது பணியில் உள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கையை நிச்சயமாக குறிப்பிட முடியாதென தெரிவித்த அவர், கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சுமார் 12 இலட்சம் ஊழியர்கள் பணிபுரிவதாக குறிப்பிட்டார்.