45,000 பெண்கள் நாடுபூராகவும் பாலியல் தொழிலில்

நாடுபூராகவும் 45,000 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

,இவர்கள் நாளொன்றிட்கு 3 இலட்சம் ஆண்களின் தேவைகளைப் பூர்த்தி  செய்வதாகவும் குருநாகல் வைத்தியசாலையின் பாலின நோய் எய்ட்ஸ் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் எச்.ஏ.சீ.டபிள்யு. ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச எயிட்ஸ் தினத்தை அண்மித்ததாக குருநாகல் இளைஞர் பௌத்த சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“மேலும்  இலங்கையிலுள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை  7 இலட்சம் என வைத்திய ஆய்வுகள் தெரிவித்தாலும், 25 இலட்சம் இலங்கையர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் என ஓரினச் சேர்க்கை அமைப்பு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

15 தொடக்கம் 24 வயது வரையான இளைஞர்கள் பாலியல் தொற்று தொடர்பான நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், குறித்த வயதினரை தெளிவுப்படுத்தும் புதிய வேலைத்திட்டங்கள் குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும்” வைத்தியர் தெரிவித்துள்ளார்.