மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வருடாந்த சாதனையாளர் பாராட்டுவிழா

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வருடாந்த சாதனையாளர் பாராட்டுவிழா சனிக்கிழமை(9.12.2017)காலை 8.00 மணியளவில் வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.விவேகானந்தராஜா அவர்களும்,கௌரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஈ.கருணாகரன் அவர்களும் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கணக்காளர் திருமதி.பீ.சுகிர்ஸ்வரன்,மாகாண கல்வித்திணைக்களத்தின் முன்னாள் மேலதிக கல்விப்பணிப்பாளர் ரீ.பொன்னம்பலம்,பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி.சங்கரி கங்கேஸ்வரன்,திருமதி. சுஜாதா குலேந்திரகுமார்,எம்.எஸ்.எம்.ஹைதரலி,வலயக்கல்வி அலுவலகத்தின் பொறியியலாளர் எச்.ஏ.எம்.ஹஹீம்,முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர்களான கே.ஜே.முத்துராஜ்,ஏ.சுகுமாரன்,மற்றும் உடற்கல்வி உதவிகல்விப்பணிப்பாளர் வீ.லவக்குமார், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த சாதனையாளர் பாராட்டு விழாவில் விளையாட்டுச் சாதனை,க.பொ.சாதாரணப் பரீட்சை சித்தி,க.பொ.த.(உ/த) சித்தி,புலைமைப்பரீட்சை சித்தி, இணைப்பாட விதானச் செயற்பாடு,போன்றவற்றில் சாதனை படைத்த 428 மாணவர்களுக்கு சான்றீதழ்களும்,வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டதோடு 64 அதிபர் ஆசிரியர்களுக்கும் ஞாபகார்த்த வெற்றிக்கேடயங்களும் அதிதிகளால் பாராட்டி,கௌரவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளை மெல்லத்தமிழில் வலயக்கல்வி அலுவலகத்தின் உளவளத்துறை ஆலோசகரும்,தொழில் வழிகாட்டல் ஆலோசகருமான அழகையா-ஜெயநாதன் தொகுத்து வழங்கினார்.முதலில் அதிதிகளை நிறமாலை அணிவித்து,திலகமிட்டு,மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.இந்தசாதனையாளர் பாராட்டுவிழா எந்த தடையுமின்றி இடம்பெறுவதற்கு சுடரேற்றப்பட்டு இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டது.மாணவர்களினதும்,ஆசிரியர்களினதும் கலைநிகழ்வுகள் பார்ப்போரை கவர்ந்திழுக்கப்பட்டு கைதட்டப்பட்டு உள்ளப்பூரிப்படையச் செய்தது.நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.