புதிய கூட்டணிக்கு பெயர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உதயமாகியுள்ள புதிய கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியுடன் சிறு சிறு கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதுடன்இ ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே குறித்த கூட்டணிக்கு “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.