பசுமை மரநடுகை

 மட்/சிவானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் 08/12/2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு  சிவானந்தா பாடசாலையின் முன்புற வீதியின் மத்திய பகுதியில் பசுமை மரநடுகை ஆரம்பிக்கப்படவுள்ளது.
சிவானந்தான் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 2017/2018 ம் ஆண்டுக்கான செயற்பாடுகளில் ஒன்றான பசுமையூட்டல் எண்ணக்கருவின் கீழ் முதற்கட்ட திட்டமாக புதிய கல்முனை வீதியின் சஞ்சீவி வைத்தியசாலை இன் U வளைவு தொடக்கம் கலைமகள் வீதியின் U வளைவு வரையான வீதியின் மத்திய பகுதியில் பசுமை மரங்கள் மற்றும் பூமரங்கள் அமைப்பதற்கான திட்டமாக இது வரையப்பட்டுள்ளது.
மட்/மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மட்/மாநகர சபையின் ஆரம்பகட்ட பங்களிப்பு மட்டுமின்றி தொடர்ச்சியான  பராமரிப்பும் உறுதிம்படுத்தப்பட்டுள்ளது.
சிவானந்தா பழைய மாணவர் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு  சங்க உறுப்பினர்கள் மட்டுமன்றி பல இயற்கை நேசிகளும் , அப் பகுதிவாசிகளும் தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.வெளிநாடுகளில் உள்ள  பழைய மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள சமூகத்தினர்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
எதிர் வரும் 08/12/2017 அன்று உத்தியோகபூர்வ ஆரம்ப மரநடுகை நிகழ்வு சிவானந்தா தே .பா. பழைய மாணவர் சங்க தலைவர் திரு.எம்.முருகவேள் தலைமையில் நடைபெற உள்ளது. இந் நிகழ்வில் இ.கி.மி சுவாமிகள் ,வலையக் கல்வி பணிப்பாளர் , மாநகர சபை ஆணையாளர் , மாநகர சபை பொறியியலாளர் , வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் ஆகியோருடன் ப.மா.ச உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் , சமூக பிரதானிகள் மற்றும் சிவானந்தா தே.பா , விவேகானந்தா பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர் . இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு  பழைய மாணவர்ககளையும் , ஆர்வலர்ககளையும் சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அன்புடன் அழைக்கின்றது.