இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகள்

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அரசியல் பேரவையின் அனுமதியின்  அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றதத்pல் இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே சபாநாயகர் கருஜயசூரிய இதனை குறிப்பிட்டார்.
ஆளும் கட்சி பிரதம அமைப்பாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 2014 ஆம் ஆண்டில் கிடைக்க பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2345 இ 2015 ஆம் ஆண்டில் 3913 முறைப்பாடுகளும்இ 2016 ஆம் ஆண்டில் 3650 முறைப்பாடுகளும்இ 2017 ஆம் ஆண்டு ஜீலை 30 ஆம் திகதி வரையில் 1322 முறைபாடுகளும் கிடைக்க பெற்றுள்ளன.
2014 ஆம் ஆண்டில் விசாரணைகள் பூரத்;தி செய்யப்பட்ட விசாரணைகளின் எண்ணிக்கை 199 ஆகும். 2015 ஆம் ஆண்டில் இத்தொகை 2818 ஆகும்.
2015 ஆம் ஆண்டு ஜீலை மாதம் வரையில் 803 விசாரணைகள் பூர்த்;திச் செய்யப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு முறைப்பாடுகளில் 803 விசாரணைகள் செய்யப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டில் 1995 முறைப்பாடுகள் ஆகும்.
2016 ஆம் ஆண்டில் 1228 முறைப்பாடுகளும் 2017 ஆம் ஆண்டு ஜீலை மாதம் வரையில் 519 முறைப்பாடுகளும் விசாரணை செய்யப்பட்டன.
விசாரணை செய்த பின்னர் அது தொடர்பில் வழக்கு தொடர்வது குறித்து ஆணைக்குழுவே தீர்மானிக்கும். அதுவரையில் சட்ட மா அதிபரிடம் அவை சமர்ப்பிக்கப்படமாட்டா.
இதற்கான சட்டம் நடைமுறையில் இல்லை. இது தொடர்பில் அமைச்சரவை உபக்குழுவொன்று மதிப்பீடு செய்துள்ளது.
அமைச்சரவையில் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. வழக்கு தொடரப்பட்டுள்ள வழக்குகளில் அரசியல் வாதிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை உயர் நீதி மன்றத்தில் 2015 ஆம் ஆண்டில் 06 ஆகும.; 2016 ஆம் ஆண்டு 02 ஆகும். 2017 ஆம் ஆண்டு இத்தொகை ஒன்றாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க
லஞ்சம் மற்றும்; ஊழல் வழக்குகளை விசாரணை செய்வதற்காக தனியான நீதிமன்றம் அமையுங்கள். இது குறித்து அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன.; செயற்திறன் மிக்க அதிகாரிகளை நியமியுங்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன
நான் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன். அதனை துரிதப்படுத்துங்கள்.
சபாநாயக்கர் கரு ஜயசூரிய 
ஆணைக்குழுக்களில் தலையீடு செய்வதை கவனத்திற்கு கொண்ட வரமுடியும்.
பாராளுமன்ற உறுப்பினர்  சமிந்த விஜேசிறி 
நானும் முறைப்பாடு ஒன்றை செய்தேன். அச்சத்தால் ஒழிந்து மறைந்துள்ளனர்.
ஆளும் கட்சி பிரதம அமைப்பாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க
வாழைப்பழ பிரச்சனை விசாரிக்கப்பட்டது. சட்டமா திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.